Homeஆன்மீக தகவல்ஸ்ரீ திருமகள் 108 போற்றி | Sri thirumagal108 Potri | Sri Lakshmi 108...

ஸ்ரீ திருமகள் 108 போற்றி | Sri thirumagal108 Potri | Sri Lakshmi 108 Potri

நமது வாழ்வில் பணக்கஷ்டம் நீங்கி செல்வ செழிப்போடு இருக்க வெள்ளிக்கிழமை தோறும் இந்த ஸ்ரீ திருமகள் 108 போற்றி கூறி வர அனைத்தும் சேரும்

Thirumagal Potri Potri

ஓம் திருவே போற்றி
ஓம் திருவளர் தாயே போற்றி
ஓம் திருமாலின் தேவி போற்றி
ஓம் திருவெலாம் தருவாய் போற்றி
ஓம் திருத்தொண்டர் மணியே போற்றி
ஓம் திருப்புக ழுடையாய் போற்றி
ஓம் திருஞான வல்லி போற்றி
ஓம் திருவருட் செல்வி போற்றி
ஓம் திருமால் மகிழ்வாய் போற்றி
ஓம் திருமார்பிலமர்ந்தாய் போற்றி-10

ஓம் தினமெம்மைக் காப்பாய் போற்றி
ஓம் தூபஜோதியே போற்றி
ஓம் துயரந்தீர்த்தருள்வாய் போற்ற
ஓம் திருப்பாற் கடலாய் போற்றி
ஓம் திருவமுதருள்வாய் போற்றி
ஓம் அன்னையே அருளே போற்றி
ஓம் அழகெலாம் உடையாய் போற்றி
ஓம் அயன்பெறுதாயே போற்றி
ஓம் அறுமுகன் மாமி போற்றி
ஓம் அமரர்குல விளக்கே போற்றி-20

ஓம் அமரேசன் தொழுவாய் போற்றி
ஓம் அன்பருக்கினியாய் போற்றி
ஓம் அண்டங்கள் காப்பாய் போற்றி
ஓம் ஆனந்தவல்லியே போற்றி
ஓம் ஆருயிர்க்குயிரே போற்றி
ஓம் ஆவிநல் வடிவே போற்றி
ஓம் ஆக்கம தருள்வாய் போற்றி
ஓம் இச்சை கிரியை போற்றி
ஓம் இருள் தனைக் கடிவாய் போற்றி
ஓம் இன்பப்பெருக்கே போற்றி-30

ஓம் இகபரசுகமே போற்றி
ஓம் ஈகையின் பொலிவே போற்றி
ஓம் ஈறிலா அன்னை போற்றி
ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி
ஓம் எண்குணவல்லி போற்றி
ஓம் ஓங்கார சத்தி போற்றி
ஓம் ஒளிமிகு தேவி போற்றி
ஓம் கற்பகவல்லி போற்றி
ஓம் காமரு தேவி போற்றி
ஓம் கனகவல்லியே போற்றி-40

ஓம் கருணாம்பிகையே போற்றி
ஓம் குத்துவிளக்கே போற்றி
ஓம் குலமகள் தொழுவாய் போற்றி
ஓம் மங்கல விளக்கே போற்றி
ஓம் மங்கையர் தொழுவாய் போற்றி
ஓம் தூங்காத விளக்கே போற்றி
ஓம் தூயவர் தொழுவாய் போற்றி
ஓம் பங்கசவல்லி போற்றி
ஓம் பாவலர் பணிவாய் போற்றி
ஓம் பொன்னி அம்மையே போற்றி-50

ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி
ஓம் நாரணன் நங்கையே போற்றி
ஓம் நாவலர் துதிப்பாய் போற்றி
ஓம் நவரத்தினமணியே போற்றி
ஓம் நவநிதி நீயே போற்றி
ஓம் அஷ்ட லக்குமியே போற்றி
ஓம் அறம்பொருள் தருவாய் போற்றி
ஓம் ஆதி லட்சுமியே போற்றி
ஓம் ஆணவம் அறுப்பாய் போற்றி
ஓம் கஜலட்சுமியே போற்றி-60

ஓம் கள்ளமும் கரைப்பாய் போற்றி
ஓம் தைரியலட்சுமியே போற்றி
ஓம் தயக்கமும் தவிர்ப்பாய் போற்றி
ஓம் தனலட்சுமியே போற்றி
ஓம் தன தானியம் தருவாய் போற்றி
ஓம் விஜய லட்சுமியே போற்றி
ஓம் வெற்றியைத் தருவாய் போற்றி
ஓம் வரலட்சுமியே போற்றி
ஓம் வரமெலாம் தருவாய் போற்றி
ஓம் முத்துலட்சுமியே போற்றி-70

 ஓம் முத்தியை அருள்வாய் போற்றி
ஓம் பூவேந்தர் தொழுவாய் போற்றி
ஓம் முத்தமிழ் தருவாய் போற்றி
ஓம் கண்ணே எம் கருத்தே போற்றி
ஓம் கவலையை ஒழிப்பாய் போற்றி
ஓம் விண்ணே எம் விதியே போற்றி
ஓம் விவேகம் தந்தருள்வாய் போற்றி
ஓம் பொன்னேநன் மணியே போற்றி
ஓம் போகம் தந்ருள்வாய் போற்றி
ஓம் பூதேவி தாயே போற்றி-80

ஓம் புகழெலாம் தருவாய் போற்றி
ஓம் சீதேவி தாயே போற்றி
ஓம் சிறப்பெலாம் அருள்வாய் போற்றி
ஓம் மதிவதனவல்லி போற்றி
ஓம் மாண்பெலாம் தருவாய் போற்றி
ஓம் நித்திய கல்யாணி போற்றி
ஓம் நீதிநெறி அருள்வாய் போற்ற
ஓம் கமலக் கன்னி போற்றி
ஓம் கருத்தினிலமர்வாய் போற்றி
ஓம் தவநிலை அருள்வாய் போற்றி-90

ஓம் கலைஞானச் செல்வி போற்றி
ஓம் கலஞருக்கருள்வாய் போற்றி
ஓம் அருள் ஞானச் செல்வி போற்றி
ஓம் அறிஞருக்கருள்வாய் போற்றி
ஓம் எளியவர்க்கருள்வாய் போற்றி
ஓம் ஏழ்மையைப் போக்குவாய் போற்றி
ஓம் வறியவர்க்கருள்வாய் போற்றி
ஓம் வறுமையை ஒழிப்பாய் போற்றி
ஓம் வேதவல்லியே போற்றி
ஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றி-100

ஓம் பிறர்பொருள் கவரஎண்ணாப் பெரியர்க்கருள்வாய் போற்றி
ஓம் நடிநிலை நீங்கிடாத நல்லவர்க்கருள்வாய் போற்றி
ஓம் அறநெறி வழுவிலாத அடியவர்க்கருள்வாய் போற்றி
ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி
ஓம் அறிவுனுள் அறிவாம் அன்னையே போற்றி
ஓம் நெறியுனுள் நெறியாம் நிலையே போற்றி
ஓம் அருள் மிகு இலக்குமி தாயே போற்றி
ஓம் மங்கலத் திருநின் மலரடி போற்றி-108

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


இதையும் படிக்கலாமே

Latest

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular