Home பயனுள்ள தகவல் 108 திவ்ய தேசங்கள் அடங்கிய பாடல் | 108 Divya Desam Padal in Tamil

108 திவ்ய தேசங்கள் அடங்கிய பாடல் | 108 Divya Desam Padal in Tamil

108 திவ்ய தேசங்கள் அடங்கிய பாடல் | 108 Divya Desam Padal in Tamil

108 Divya Desam Padal in Tamil | 108 திவ்ய தேசங்கள் அடங்கிய பாடல்

திருமால் எழுந்தருளியிருக்கும் 108 திருத்தலங்களை திவ்யதேசங்கள் என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது. ஆழ்வார்கள் திவ்ய தேசங்களின் அனைத்து வழிபாடுகளையும் தன் பாடல்களால் விவரித்துள்ளனர்.

வைகுண்டத்தில் வீற்றிருந்த பெருமாளிடம் பிரம்மதேவன் ஒரு வினாவை முன்வைத்தார. அதாவது “பெருமாளே! இப்போது தங்கள் வீட்டில் இருக்கும் இவ்வைகுண்டத்தை தவிர எங்கெல்லாம் எழுந்தருளி உள்ளீர்கள்” என்று வினவினார் பிரம்மதேவர்.

அதற்கு விஷ்ணு பகவான் “ஸதம்வோ அம்ப தாமானி ஸப்தச்ச” என்று விடையளித்தார். திருமால். ‘ஸதம்’ என்றால் ‘நூறு’ என்றும், ‘ஸப்த’ என்றால் ‘ஏழு’ என்று அர்த்தம். அதன்படி வைகுண்டம் தவிர மேலும் 107 இடங்களில் பெருமாள் வாசம் செய்கிறார்.
அய்யங்கார் என்பவர் 108 திவ்ய தேசங்கள் எங்கு உள்ளது என்ற பாடல் மூலம் விவரித்துள்ளார்

108 திவ்ய தேசங்கள் அடங்கிய பாடல்

ஈரிருபதாஞ்சோழம் ஈரொன்பதாம் பாண்டி
ஓர் பதின்மூன்றாம் மலைநாடு; ஓரிரண்டாம் – சீர்நாடு
ஆரோடீரெட்டுத் தொண்டை; அவ்வட நாடாறிரண்டு
கூறு திருநாடொன்றாக் கொள்”

பொருள்:- சோழ நாட்டில் 40 ஆலயங்கள், பாண்டிய நாட்டில் 18, மலைநாட்டில் 13, நடுநாட்டில் 2, தொண்டை நாட்டில் 22, வட நாட்டில் 12, திருநாடு என்னும் வைகுண்டம் ஒன்று. ஆக மொத்தம் 108.

108 திவ்ய தேசங்களிலும், திருமால் நின்ற, கிடந்த, இருந்த என்ற மூன்று கோலங்களில் காட்சி தருகிறார். அதன்படி 60 திவ்ய தேசங்களில் நின்ற கோலத்திலும், அதற்கு அடுத்த படியாக 27 திருத்தலங்களில் கிடந்த (சயனம்) கோலத்திலும், 21 திருக்கோவில்களில் இருந்த (அமர்ந்தபடி) கோலத்திலும் அருள்பாலிக்கிறார்.

மேற்கண்ட 108 திவ்ய தேசங்களில், 79 திவ்ய தேசங்கள் கிழக்கு திசை நோக்கியும், 19 திவ்ய தேசங்கள் மேற்கு திசை நோக்கியும், 7 திவ்யதேசங்கள் தெற்கு திசை நோக்கியும், 3 திவ்ய தேசங்கள் வடக்கு திசை நோக்கியும் அமைந்துள்ளது.

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here