Arulmigu Analendiswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு அனலேந்தீஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.
Details of Arulmigu Analendiswarar Temple
அருள்மிகு அனலேந்தீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:
அனலேந்தீஸ்வரர், தான்தோன்றீஸ்வரர்
அருள்மிகு அனலேந்தீஸ்வரர் திருக்கோயில் தாயார்:
அமிர்தவள்ளி, சுந்தரவள்ளி
அருள்மிகு அனலேந்தீஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:
–
அருள்மிகு அனலேந்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:
கணக்கன்குடி
அருள்மிகு அனலேந்தீஸ்வரர் திருக்கோயில் வரலாறு:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கணக்கன்குடி கிராமம். தென்தமிழகத்தின் திருவண்ணாமலை என போற்றப்படும் அனலேந்தீஸ்வரர் கோயில் இங்கு அமைந்துள்ளது. பஞ்சபூதங்களான நிலம், நீர், காற்று, வாயு, நெருப்பு ஆகியவற்றின் வடிவாக சிவன் இருப்பதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் நெருப்பின் வடிவாக உள்ளார், அங்கு எவ்வளவு மழை பெய்து குளிர்ச்சி நிலவினாலும் அருணாச்சலேஸ்வரர் கர்ப்பகிரகத்தினுள் வெப்பம் நிலவும். அது போல கணக்கன்குடி அனலேந்தீஸ்வரர் கோயிலிலும் நெருப்பு வடிவாக சிவன் உள்ளார். அனல் என்றால் நெருப்பு அனலேந்தீஸ்வரர் என பெயர் வந்தது. இத்திருக்கோயிலில் மூலவராக அனலேந்தீஸ்வரரும் இச்சா சக்தியாக ஸ்ரீஅமிர்தவள்ளி தாயரும், கிரியா சக்தியாக சுந்தரவள்ளி தாயாரும், ஞான சக்தியாக வேதவள்ளி தாயாரும் காட்சியளிக்கின்றனர். 300 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட திருக்கோயில் இது. இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளும் இணைந்த சிறப்பம்சமாகும். நமச்சிவாய என்ற எழுத்தில் நடு எழுத்தான சி நெருப்பு என்பதால் இது நெருப்பு ஸ்தலம் என அழைக்கப்படுகிறது.
இங்கு அகத்தியர் வழிபட்ட ஸ்தலம் என்றும் இன்றளவும் அகத்தியர் அரூபமாக வந்து வழிபடுகிறார் என்றும் நம்பப்படுகிறது.
அருள்மிகு அனலேந்தீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:
ஆண்டு தோறும் பங்குனி மாதம் 27, 28 தேதிகளில் மூலவர் அனலேந்தீஸ்வரர் மீது சூரிய ஒளி படர்வது சிறப்பு.
அருள்மிகு அனலேந்தீஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:
திருக்கார்த்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அருள்மிகு அனலேந்தீஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும்.
[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
அருள்மிகு அனலேந்தீஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:
இங்கு வேதவள்ளி தாயார் ஞான சக்தியாக இருப்பதால் குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்து பூஜை செய்பவர்களுக்கு அறிவான ஞான குழந்தை பிறக்கும். மூலவர் அனலேந்தீஸ்வரரை வழிபட்டால் அக்னி சம்பந்தமான கொப்புளங்கள், வெடிப்புகள் உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.
அருள்மிகு அனலேந்தீஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:
பிரிந்து வாழும் கணவன்-மனைவியரில் யாராவது ஒருவர் வந்து பூஜை செய்தாலும் மீண்டும் ஒன்று கூடுவார்கள், அதுபோல இழந்த சொத்தை மீட்க சிறப்பு பூஜை செய்தால் உடனடியாக பலன் கிட்டும் என்கின்றனர். வியாழன்தோறும் தட்சிணாமூர்த்திக்கு வில்வம், கொண்ட கடலை மாலை அணிவித்து நெய் விளக்கு ஏற்றி வந்தால் தீராத பல்வேறு பிரச்சனைகள் தீரும்.
அருள்மிகு அனலேந்தீஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Analendiswarar Temple:
அருள்மிகு அமிர்தவள்ளி சமேத அனலேந்தீஸ்வரர் திருக்கோயில், கணக்கன்குடி, மடப்புரம் வழி, சிவகங்கை-630562
அருள்மிகு அனலேந்தீஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]