Homeஆன்மீக தகவல்அகத்திக் கீரை - Agathi Keerai uses

அகத்திக் கீரை – Agathi Keerai uses

Agathi Keerai uses – அகத்தைச் சுத்தப் படுத்துவதால் அகத்தி எனப் பெயரை வைத்துள்ளனர் சித்தர்கள். 

அகத்திக் கீரையை உண்டால் உணவு எளிதில் சமிபாடடையும். பித்த தொடர்பான நோய்கள் நீங்கும், வாரத்துக்கு ஒரு முறையேனும் தவறாமல் அகத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடடால் தேகத்தில் சூடு தணியும் கண்கள் குளிர்ச்சி பெறும். குடல் புண் ஆறும், சிறு நீர் மற்றும் மலம் தாரளமாக கழியும்.

பித்து எனும் மனக் கோளாறும் நீங்கும், அகத்தி கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும்.

அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து நான்கு பங்கு சின்ன வெங்காயம் சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினசரி ஒரு வேளை குடிக்கலாம். அகத்தி கீரையையும் மருதாணி இலையையும் சம அளவில் எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.


அகத்திக் கீரைச் சாற்றை சேற்றுப் புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும். உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்திக் கீரையின் இலையைத் தேங்காய் எண்ணெயில் வதக்கி, அதை விழுதாக அரைத்துப் பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.

அகத்திக் கீரையைச் சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிடலாம். அகத்தி கீரையைக் ஏகாதசி அன்று விரதமிருந்த பிறகு துவாதசியன்று உணவில் அகத்திக் கீரை உடன் நெல்லிக்காயையும் சேர்த்துக் கொள்வது சிறப்பு.

எதையும் அர்த்ததுடன் தான் நம் முன்னோர்கள் வகைப் படுத்தியுள்ளனர். நாம் அதை மதித்து நடக்க வேண்டும்,

அகத்திக் கீரைக்கு எல்லா மருந்துகளின் வீரியத்தையும் முறிக்கும் சக்தி உண்டு .எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். வாரம் ஒரு முறை மட்டுமே அகத்தியை உபயோகிக்க வேண்டும் .அதிகம் உபயோகித்தால் சொறி சிரங்கு வரும் .

அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தியே” என்று ஒரு பழமொழி அகத்தியைப் பற்றிக் கூறப்படுகிறது.

அகத்தியை போற்றும் சித்தர் பாடல்:

”மருந்திடுதல் போகுங்காண் வங்கிரந்தி வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும்- வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம்
நாளும் அகத்தியிலை தின்னு மவர்க்கு.”

அகத்திக்கீரையோட மகத்துவம் நமக்கு பலபேருக்கு தெரியாது. இதில் வைட்டமின் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் இருக்குது. சாம்பார், கூட்டு, பொரியல் செஞ்சி இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் எலும்பு நல்லாகவே வளரும். வயசான காலத்தில் சிலபேருக்கு இடுப்பு எலும்பு பலமில்லாமல் முன்பக்கமோ, பின்பக்கமோ வளைஞ்சி நடக்கவே முடியாமலிருக்கும்..

இந்தமாதிரிப் பிரச்சினைகளைத் தவிர்க்க அடிக்கடி அகத்திக்கீரை சாப்பிடவும். இது வாயுவை உண்டாக்குகின்ற கீரையா இருந்தாக்கூட அதோட பெருங்காயம், வெ‌ள்ளைப்பூண்டு சேர்த்து சமைச்சா வாயு விலகிப்போயிரும். அகத்திக்கீரையில அவ்வளவு மகத்துவம் உள்ளது.

மற்ற கீரைகள்…..

அரைக்கீரையை தினமும் சோற்றுடன்/ சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும். கல்யாணமான ஆண்க‌ள் அரைக்கீரையோட வெங்காயம் சேர்த்து நெ‌ய்யில பொரிச்சி சாப்பிட்டு வந்தா புது ரத்தம் ஊறி தாது அவுக்க‌ள் உற்பத்தியாகி இல்லற வாழ்க்கைக்கு தேவையான சக்தி கிடைக்கும்.

குழந்தை பெற்ற பெண்கள் உடலில் போதுமான சக்தி இருக்காது. அவர்கள் அரைக்கீரையைக் கடைஞ்சி சாப்பிட்டால் நல்ல பலம் கிடைப்பதுடன் குழந்தைக்கு தேவையான பாலும் சுரக்கும்.

முருங்கைக்கீரை உங்க வீட்டுலயோ, வீட்டுக்கு பக்கத்திலயோ இருக்கும். ஆனா நாம அதை சீண்டுறதில்ல. அதில இருக்குற மகத்துவம் நமக்கு தெரியாததுதான் காரணம். நிறைய தா‌ய்மார் குழந்தைக்கு பால் கிடைக்குறதில்லனு மனசு சங்கடப்பட்டு ஏதேதோ வைத்தியம் செ‌ய்வாங்க. அவங்கல்லாம் ஏனோ முருங்கைக்கீரையை மறந்திட்டாங்க. முருங்கைக்கீரையை பருப்போடவோ தனியாவோ சமைச்சு சாப்பிட்டு வந்தாலே தேவையான தா‌ய்ப்பால் சுரக்கும். குழந்தைங்களுக்கு சிலநேரம் வயிற்று உப்பிசம் வந்து வீல்வீல்னு கத்தும்.

இந்த மாதிரி பிரச்சினைக்கு முருங்கைக்கீரையை சுத்தம் பண்ணி உ‌ள்ளங்கையில வச்சி நல்லா கசக்கி சாறு எடுத்து வடிகட்டி, அரை ஸ்பூன் அளவுக்கு எடுத்து அதோட அரை பட்டாணி அளவு கல் உப்பை கரைக்கவும். அப்புறமா அரை ஸ்பூன் அளவுக்கு வெந்நீர் சேர்த்து கலந்து உ‌ள்ளுக்கு கொடுத்தா வீல் வீல் சத்தம் அடங்கிப்போயிரும். முருங்கைக்கீரையை சுத்தம் பார்த்து நல்லா வேக வச்சி அதோட கோழி முட்டையை உடைச்சிப்போட்டு நல்ல கிளறவும்.

பிறகு சூடு ஆறுறதுக்கு‌ள்ள அதை சாப்பாட்டோட சேர்த்து சாப்பிட்டு வந்தீங்கனா ஒடம்புல பலம் ஏறும். 40 நா‌ள் விடாம செஞ்சிட்டு வந்தீங்கனா முழு பலனையும் அடையலாம். கொத்தமல்லிக்கீரையை சாம்பார், ரசத்துல ஏதோ வாசனைக்காக சேர்ப்போம். ஆனா தனியா செஞ்சி சாப்பிடுறதில்ல. துவையலாவோ, சாதத்தோட கலந்தோ சாப்பிட்டு வந்தீங்கனா புது ரத்தம் உற்பத்தியாகுறதோட எல்லா சக்தியும் கிடைக்கும்.

வயித்துப்புண்ணால கஷ்டப்படுறவங்க கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டு வந்தா நல்ல குணம் கிடைக்கும். மூக்கடைப்பு, மூக்குல சதை வளர்ந்து அவதிப்படுறவங்க கொத்தமல்லி துவையலை ஒரு கொட்டைப்பாக்கு அளவு தினமும் சாப்பாட்டுல சேர்த்து வந்தா நல்ல நிவாரணம் கிடைக்கும். தூதுவேளைக்கீரையை நெ‌ய்யில வதக்கி துவையலாவோ மசியலாவோ சாப்பிட்டு வந்தீங்கனா கபக்கட்டு விலகி உடம்புல வலு ஏறும். அறிவு வளரும்.

தூதுவேளை கீரையை கஷாயமா செஞ்சி கஸ்தூரி, கோரோஜனை மாத்திரை சேர்த்து சின்ன குழந்தைகளுக்கு கொடுத்திட்டு வந்தா சளியினால வர்ற கா‌ய்ச்சல் குணமாகும். டைபா‌ய்டு, நிமோனியா மாதிரி கா‌ய்ச்சல் நேரத்துல கபம் உண்டாகி நெஞ்சுல சளி அடைச்சிக்கிட்டா தூதுவேளைக்கீரையை கொடுத்திட்டு வந்தா நல்ல குணம் கிடைக்கும் .

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


இதையும் படிக்கலாமே

Latest

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular