இந்தியாவில் பல மதங்களும் எண்ணற்ற ஜாதிகளும் உள்ளன. இந்த மதங்களில் மிகவும் தொன்மையானதும், புனிதமானதுமானது எது என்றால் அது இந்துமதமே! இந்த இந்துமதத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக தினமும் தவறாமல் செய்ய வேண்டிய முக்கிய கடமைகளான நமது முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர். அதன்படி நாமும் நடக்க பழக வேண்டும்.
இந்துக்களின் தினசரிக் கடமைகள்
தினமும் சூரியன் உதிப்பதற்குமுன் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவும்.
காலையில் எழுந்தவுடனும், நீராடிய பின்னும், உணவு கொள்ளும் போதும் இஷ்ட தெய்வத்தைச் சிந்திக்கவும்.
நெற்றியில் இந்து சமயச்சின்னம் (திருநீறு, குங்குமம், சந்தனம், திரு நாமம் – ஏதேனும்) அணியாமல் இருக்கக் கூடாது.
இறைவழிபாட்டுக்கு என, தனியே இடம் ஒதுக்கித் தவறாது வழிபாடு செய்யவும். காலை – மாலையில் விளக்கேற்றி நறுமணப் புகை பரவச் செய்யும்.
சமய நூல்களை படித்தல் வேண்டும்.
படுக்கும்போது தெய்வத்தின் நினைவோடு படுக்க வேண்டும்