Arulmigu Agneeswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.
Details of Arulmigu Agneeswarar Temple
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:
அக்னீஸ்வரர்
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் தாயார்:
–
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:
–
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:
களக்காட்டூர்
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் வரலாறு:
ஒரு முறை வாயு, வருணன், அக்னி ஆகிய மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில் அக்னி பகவான் மறைந்து விட்டார். இதனால் உலகில் யாகம் முதலியன நடத்த முடியவில்லை. நைவேத்யம் உள்ளிட்ட அனைத்தும் நின்று போயின. மிகுந்த துன்பத்திற்குள்ளான முனிவர்களும், தேவர்களும் இதிலிருந்து விடுபட லிங்க பூஜை செய்தனர். சிவன் அவர்கள் முன்தோன்றி அக்னி பகவானை அங்கே அழைத்தார். அவர் இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்பு, ஏழு கை, ஏழு ஜூவாலையுடன் வெளிப்பட்டார். சிவதரிசனம் பெறவே, வாயு, வருணனுடன் தர்க்கம் செய்வது போல் நாடகமாடியதாக தெரிவித்த அக்னி, தனக்கு சிவன் காட்சியளித்த இடத்தில் ஒரு லிங்கத்தை வடித்து பூஜித்தார். அக்னிக்கு காட்சியளித்த அவருக்கு அக்னீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
உருனி ஆழ்வார்: இந்த சிவனுக்கு ஊருணி ஆழ்வார் என்ற பெயர் இருக்கிறது. அது தற்போது பேச்சுவழக்கில் உருனி ஆழ்வார் என மாறிவிட்டது. ஊருணி என்றால் சிறு குளம். இந்தப் பெயரை நிரூபிக்கும் வகையில் கோயில் அருகில் புத்தேரி என்னும் குளம் இருக்கிறது. இதன் புராணப்பெயர் சந்திரமேகத் தடாகம். சிவன் அக்னி வடிவானவர் என்பதால், அவரைக் குளிர் விக்கும் வகையில் இந்த ஊருணி தோண்டப்பட்டிருக்கிறது.
[pld_simple_list limit=”1″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:
இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் ரிஷபத்தின் மீது உள்ளது சிறப்பு.
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:
பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:
சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Agneeswarar Temple:
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்
களக்காட்டூர், காஞ்சிபுரம்.
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]