Home கோவில்கள் அருள்மிகு கனகாம்பிகை உடனுறை கனகாளீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Kanakambikai Udanurai Kanakaleswarar Temple, திருஞானசம்மந்தர் தபோவனம்

அருள்மிகு கனகாம்பிகை உடனுறை கனகாளீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Kanakambikai Udanurai Kanakaleswarar Temple, திருஞானசம்மந்தர் தபோவனம்

அருள்மிகு கனகாம்பிகை உடனுறை கனகாளீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Kanakambikai Udanurai Kanakaleswarar Temple, திருஞானசம்மந்தர் தபோவனம்

Arulmigu Kanakambikai Udanurai Kanakaleswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு கனகாம்பிகை உடனுறை கனகாளீஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Kanakambikai Udanurai Kanakaleswarar Temple

அருள்மிகு கனகாம்பிகை உடனுறை கனகாளீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

கனகாளீஸ்வரர்

அருள்மிகு கனகாம்பிகை உடனுறை கனகாளீஸ்வரர் திருக்கோயில் தாயார்:

கனகாம்பிகை

அருள்மிகு கனகாம்பிகை உடனுறை கனகாளீஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு கனகாம்பிகை உடனுறை கனகாளீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

திருஞானசம்மந்தர் தபோவனம்

அருள்மிகு கனகாம்பிகை உடனுறை கனகாளீஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

முன்பொரு காலத்தில் பானாசூரன் என்பவன் பூமியில் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்தான். நாம் அனைவரும் தினமும் பூஜைக்கு தேவையான பூ, பழம், அன்னபிரசாதம் போன்ற பொருட்களைத்தான் தினமும் புதிதாக ஏற்பாடு செய்வோம் ஆனால் இந்த பானாசூரன் தினமும் ஒரு புது சிவபானம் வைத்து பூஜைசெய்வான். பூஜை முடிந்தபின் அந்த சிவலிங்கத்தை நர்மதா நதியில் விட்டுவிடுவான். இப்படி இரண்டாயிரம் வருடம் பூஜை செய்ததன் பலனாக அகிலாண்டகோடி பிரம்மான்ட நாயகனான சிவபெருமான் பானாசூரன் முன்பு தோன்றி வேண்டிய வரம் கேள் என்று கூறினார்.

உடனே பானாசூரன் தேவர் மூவர்களாளும் மற்றும் உள்ள பறவை, விலங்குகள், எந்த ஆயுதங்கள் கொண்டு போர்புரிந்தாலும் தனக்கு மரணமே ஏற்படக்கூடாதென்று வரம்பெற்றான். இறைவனும் வரம் தந்து மறைந்தார். இதனால் தலைகணம் கொண்ட பானாசூரன் மூன்று உலகங்களையும் அடிமைப்படுத்தி கொடுங்கோள் ஆட்சி செய்தான், தேவர்களை சிறைவைத்தான். அண்டங்களை பந்தாடினான். தேவர்கள் அனைவரும் உலகுக்கே தாயாய் விளங்க கூடிய பராசக்தியிடம் முறையிட்டனர். உடனே அன்னையானவள் பானாசூரனிடம் கடும் போர் புறிந்தாள் நெடுங்காலம் போர்புரிந்தும் போரில் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை. எனவே பரமேஸ்வரனிடம் சென்று முறையிட்டனர்.

சுவாமியாகிய பரமேஸ்வரன் பானாசூரனை விழுங்கி ஜீரனம் செய்யுமாறு கட்டளையிட்டார். எனவே அன்னையானவள் பெரிய பயங்கர ரூபமாகிய காளியாக உருமாரி பானாசூரனை விழுங்கி ஜீரனம் செய்தால் ஆனால் ஒரு மிகப்பெரிய சிவபக்தனை அன்னை விழுங்கியதால் பராசக்திக்கு பிரம்மகத்திதோசம் ஏற்பட்டது. இந்த தோசத்தை போக்க பூமியில் காளியானவள் அனேக இடங்களில் ஈஸ்வரனை நினைந்து கடுந்தவம் இயற்றினார். அப்படி தவம் புரிந்த இடங்களில் நம்முடைய கோயில் இருக்கும் இடத்தில் ஏழு தலைகளை கொண்ட பெரிய நாகமாக அன்னையானவள் ஈசனை நோக்கி பூஜைசெய்தாள் இறைவனும் காட்சி கொடுத்து அன்னைக்கு இந்த பூமியில் வாழும் மக்களுக்கு வறுமையை ஒழிக்கும் படியும் இயற்கை பேரழிவில் இருந்து அனைத்து ஜீவன்களையும் காப்பாற்றும்படியும் கட்டளையிட்டு முடிவில் காளையார் கோயிலில் வந்து தவம் செய்து தன்னை சேரும் படியும் கூறி மறைந்தார்.

காளிக்கு அருள்செய்த படியால் இங்கு உள்ள சிவனுக்கு கனக காளீஸ்வரர் என்ற திருநாமம் விளங்குகிறது மற்றும் நம்முடைய லிங்கமூர்த்தி நர்மதா நதியில் இருந்து  கொண்டுவரப்பட்ட சுயம்புமூர்த்தி என்பதால் மிகவும் அருள்கடாச்சத்தோடு அனைவருக்கும் இன்பத்தை வாரி கொடுத்து வரதான மூர்த்தியாக விளங்குகிறார். சுவர்ன ஆகர்ஸ்ன பைரவர் மற்றும் கவர்னமாகாளியும் தனித் தனி சன்னதியில் வீற்றிருந்து பரிகார மூர்த்தியாக விளங்குகிறார்கள்.

அருள்மிகு கனகாம்பிகை உடனுறை கனகாளீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

நாயன்மார்களில் முதல்வரும், நால்வரில் ஒருவருமாகிய திருஞானசம்பந்தருக்கு தனி சன்னிதி அமைத்து இத்திருக்கோவிலில் குரு இடத்தில் அருள்பாலிக்கிறார் மற்றும் 63 நாயன்மார்களுக்கும் தனிசன்னதி அமைந்துள்ளது. மற்றும் இங்கு லில் காலையில் அபிஷேக நேரத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் இறைவனுக்கு தங்கள் கைகளாலேயே பால் மற்றும் அபிஷேக பொருட்கள்கொண்டு அபிஷேகம் செய்யலாம்.

அருள்மிகு கனகாம்பிகை உடனுறை கனகாளீஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

இத்திருக்கோயிலில் ஒவ்வொரு பிரதோஷ விழாவும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது மற்றும் சிவராத்திரி, பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம் என அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகிறது.

அருள்மிகு கனகாம்பிகை உடனுறை கனகாளீஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு கனகாம்பிகை உடனுறை கனகாளீஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

இங்கு வந்து வேண்டி கொண்ட நியாயமான பிராத்தனைகளை இறைவன் நிறைவேற்றி வைக்கிறார்.

அருள்மிகு கனகாம்பிகை உடனுறை கனகாளீஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

இங்கு கோயில் கொண்டுள்ள சுவர்ன காளிக்கு பொங்கலிட்டு எலுமிச்சைபழ மாலை சாற்றி அபிஷேகம் செய்தால் எல்லா வறுமையும் போகும் அம்பிகையின் தோசமே நிவர்த்தியானதால் இங்குவரும் பக்தர்களின் எல்லா தோசங்களும் நிவர்த்தியாகும்

அருள்மிகு கனகாம்பிகை உடனுறை கனகாளீஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Kanakambikai Udanurai Kanakaleswarar Temple:

அருள்மிகு கனகாம்பிகை உடனுறை கனகாளீஸ்வரர் திருக்கோயில்,
திருஞானசம்மந்தர் தபோவனம்,
மடுவன்கரை கிளாய் கூட்டுசாலை,
ஸ்ரீபெரும்பூதூர், காஞ்சிபுரம் மாவட்டம் -602105.

அருள்மிகு கனகாம்பிகை உடனுறை கனகாளீஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here