Home கோவில்கள் அருள்மிகு நடனபுரீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Natanapuriswarar Temple, நடப்பூர்

அருள்மிகு நடனபுரீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Natanapuriswarar Temple, நடப்பூர்

அருள்மிகு நடனபுரீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Natanapuriswarar Temple, நடப்பூர்

Arulmigu Natanapuriswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு நடனபுரீஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Natanapuriswarar Temple

அருள்மிகு நடனபுரீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

நடனபுரீஸ்வரர்

அருள்மிகு நடனபுரீஸ்வரர் திருக்கோயில் தாயார்:

நடனபுரீஸ்வரி

அருள்மிகு நடனபுரீஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு நடனபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

நடப்பூர்

அருள்மிகு நடனபுரீஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

சோழன் ஆட்சியில் கட்டிய 108 கோயில்களில் இக்கோயிலும் ஒன்று. இக்கோயில் பக்தி இலக்கியம் உள்ளிட்ட  பல்வேறு கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது. காலப்போக்கில் பராமரிப்பில்லாமல் சிதிலமடைந்து. பின் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு ஜெயயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த 2008 ம் ஆண்டு நவம்பரம் 7ம்தேதி நேரில் வருகை தந்து இறைவனை வணங்கினார்.அதன் பின் அப்பகுதியைச் சேர்ந்த கலியபெருமாளை அழைத்து, தன் கழுத்தில் இருந்த பட்டாடையை அணிவித்து கோயில் கட்ட அருளாசி வழங்கியுள்ளார்.  ரூ.35 லட்சம் செலவில் புதிதாக கோயில் கட்டி பிற விக்ரஹங்கள் பிரதிஷ்ட்டை செய்து 2013  செப்டம்பர் மாதம் கோயில்  கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். இங்கிருந்த மற்றும் பூமிக்கடியில் கிடைத்த ஐம்பொன்னாலான 14 விக்கரஹங்கள் அரசு பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் தியாகராஜர் உமையாளுடன், தர்மங்களும், சாஸ்திரங்களும் இவ்வுலகில் சிறந்து விளங்க  இந்திரன் முதலான தேவர்களுடன் திருமாகாளம் என்ற இடத்திற்கு சோமாசி நாயன் மார்க்கு அருள்புரிய, சோமயாகத்திற்கு செல்லும் பொருட்டு புலவன், புலர்த்தியர் வேடம் பூண்டு இந்த ஊரில் நடனமாடி, இங்கிருந்து நடந்தே சென்றதால் நடப்பூர் என வந்துள்ளது. இந்த தகவல் அறிந்த சோழ மன்னன்  சிவனுக்கு கோயில் கட்டினான்.

அருள்மிகு நடனபுரீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

அருள்மிகு நடனபுரீஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி, அமாவாசை, ஆருத்ரா தரிசனம், மாசிமகம், தமிழ் வருடப்பிறப்பு

அருள்மிகு நடனபுரீஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு நடனபுரீஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம் கிடைக்கவும், நாகதோஷம் நீங்கவும், தீராத நோய்கள் தீரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

அருள்மிகு நடனபுரீஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தியும், சொறிப்பிள்ளையார், நாகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

அருள்மிகு நடனபுரீஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Natanapuriswarar Temple:

அருள்மிகு நடனபுரீஸ்வரர் திருக்கோயில்
நடப்பூர் அஞ்சல், கங்களாஞ்சேரி வழி.
திருவாரூர்-610101.

அருள்மிகு நடனபுரீஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here