Home கோவில்கள் அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Theniswarar Temple, வெள்ளலூர்

அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Theniswarar Temple, வெள்ளலூர்

அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Theniswarar Temple, வெள்ளலூர்

Arulmigu Theniswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Theniswarar Temple

அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

தேனீஸ்வரர்

அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் தாயார்:

சிவகாம சுந்தரி

அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

வன்னி மரம்

அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

வெள்ளலூர்

அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

தேன் ஈயினால் பூஜிக்கப்பட்டதால் மூலவருக்கு தேனீஸ்வரர் என்ற பெயர் வந்தது.

கொங்கு நாட்டில் உள்ள தொண்மையான சிவஸ்தலங்களுள் ஒன்று தேனீஸ்வரர் கோயில். வெள்ளலூரில் அமைந்த புராதனமான ஸ்தலம். இவ்வூர் வரலாற்று சிறப்பு மிக்க ஊராகும். ரோமான்யர் காலத்து காசுகள், மோதிரங்கள் இரண்டு மணிகள், தங்க தாம்பாளம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரோமான்யர்கள் இங்கு வந்து வாணிபம் செய்தது புலனாகிறது. காஞ்சி மாநதி எனும் நொய்யல் நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. இவ்வூர் அன்னதான புரி, சிவபுரி, வேளிர் ஊர், சர்க்கார் அக்ரஹாரம், சதுர்வேத மங்கலம் வெள்ளலூர் என பலபெயர்களால் வழங்கப்பட்டதாக வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள வெள்ளலூர் எனும் பெயரே நிலைத்து விட்டது. கரிகாற் சோழன் ஆட்சி செய்த காலத்தில் அரசிளங்குமரன் தெருவில் தேரை ஓட்டிச் சென்ற போது ஒரு பசுகன்றின் மீது தேர் சக்கரம் ஏறி அக்கன்று, அவ்விடத்திலேயே மாண்டது. அதற்குத் தண்டனையாக தன் மகனைத் தேர் ஓட்டிக் கொன்றான். இக் கொலையால் அரசனுக்கு விருமத்தி தோஷம் பிடித்தது. அதைப் போக்குவதற்கு காமாக்ஷி என்ற குறித்தியிடம் குறி கேட்க, கொங்கு நாட்டில் மக்களைக் குடியேற்றி, கோயில்களைக் கட்டி திருப்பணி செய்தால் விருமத்தி தோஷம் தொலையும் எனக் கூறினாள். அதன்படி கரிகாற் சோழன் தன் பரிவாரங்களான சேரன் சமய முதலி, கத்துரி ரங்கப்பசெட்டி ஆகியோருடன் கொங்கு நாட்டிற்குப் புறப்பட்டான். கரூரில் தொடங்கி ஒவ்வொரு சிவன்கோயில்களையும் ஊர்களையும் தோற்றுவித்து வெள்ளலூருக்கு வந்து சேர்ந்தனர். தன் பரிவாரங்களுடன் வெள்ளை என்கிற இருளன் பதிவனத்திற்குச் சென்றனர். அங்கு கோயில் கட்டுவதற்காக வனத்தை அழித்து சுத்தம் செய்யும் போது சுயம்புவாக ஒரு சிவலிங்கத் திருமேனியைக் கண்டனர். சோழன் கொங்கு நாட்டிற்கு வந்து போது அப்பகுதி அடர்ந்த வனமாக இருந்தது. ஆங்காங்கு இருளர்கள் பதிகளை கட்டிக்கொண்டு வேட்டையாடி பிழைத்து குல தெய்வத்திற்கு கோயில் கட்டி வழிபட்டுவந்தனர். அவ்வனத்தில் குடி இருந்த இருளன் வெள்ளையன் பெயரில் வெள்ளலூர் எனும் ஊரையும் உருவாக்கி பல்வேறு குலத்தவர்களையும் குடி அமர்த்தினார். கோயிலையும் கட்டி முடித்தனர். கோயிலுக்கு அருகே குளம், கோட்டை மற்றும் பேட்டை ஆகியவற்றை உருவாக்கினார். ஊரை நிர்வாகம் செய்ய அதிகாரிகளையும் நியமித்தார். உத்தம பண்டிதரை வரவழைத்து தேனீஸ்வர முடையாருக்கு அஷ்ட மந்திர பிரதிஷ்டையும் செய்யப்பட்டது. கோயில் பூஜைகள் திருவிழாக்கள் தங்கு தடையின்றி நடந்து வர கோயிலுக்கு மானியமாக வயல்களையும் பூமிகளையும் தானமாக அளித்து ஓலைப்பட்டயம் வழங்கினார். கோயில் பூஜைகளும் திருவிழாக்களும் தங்கு தடையின்றி நடந்து வரலாயிற்று. கொங்கு நாட்டில் கரிகாற்சோழன் கரூர் முதல் முட்டம் வரை புகழ்பெற்ற 36 சிவன் கோயில்களை உருவாக்கினான். அவற்றுள் இதுவும் ஒன்று. தேனீஸ்வரர் கோயில்.

படம், தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.

அடுத்ததாக கொடிக்கம்பமும், நந்தி மண்டபமும் உள்ளன. எட்டுத் தூண்களைக் கொண்ட மகா மண்டபத்தில் தென்பகுதியில் விநாயகர் சன்னிதி உள்ளது. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் மூலவர் சுயம்பு தேனீஸ்வரர் நாகாபரணத்துடன் எழுந்தருளி உள்ளார். இக்கருவறைக்கு வடக்கு பக்கம் அன்னை சிவகாம சுந்தரி நின்ற கோலத்தில் அருள்புரிகின்றார். ஒரே கோபுரத்தின் கீழ் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருப்பது அபூர்வம். இவ்வாறு சேர்ந்து இருந்தால் மட்டுமே வலம் வரலாம் என்பது ஐதீகம். சிவகாம சுந்தரியின் சன்னிதி முன்பாக சங்கர நாராயணன் திருமேனி உள்ளது. தேவலோக பசுவான காமதேனு வந்து வழிபட்ட பெருமைக்குரியதால் தேனீசர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் ஒரு காம்பில் 5 இலைகள் கொண்ட மந்தாரை மரத்தில் பூக்கும் இளம் சிவப்பு வர்ணத்தில் உள்ள பூக்களை பூஜைக்கு பயன்படுத்தி துதித்தால் ராகு கேது தோஷத்தின் தாக்கம் குறைவதாக நம்புகின்றனர். மேலும் இந்த மரப்பொந்தில் இருந்து ஒரு நாகம் வந்து கோமுகம் வழியாக கருவறைக்குச் சென்று ஈசனை வழிபட்டு திரும்புகின்றன. இத்தலத்தின் தீர்த்தமாக முன்பு காஞ்சிமா நதி (நொய்யல்) நீர் இருந்தது. தற்போது நதி வரண்டு மாசுப்பட்டுப் போனதால் ஜலமூலையில் உள்ள சிறிய கிணற்று நீரைத் தீர்த்தமாக பயன்படுத்தப் படுகிறது. ஸ்தல விருட்சம் வன்னி மரம். இங்கு ஆண் பெண் என இருமரங்கள் இருப்பது விசேஷம். மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றுமே சிறந்து விளங்குவதால் இத்தலம் ஆற்றல் மிகுந்த சாநித்யம் வாய்ந்த தலமாக விளங்குகிறது. மேலும் புராதனமான இத்தலத்தில் வியாபிக்கும் தெய்வீக அதிர்வுகளை உணரமுடியும். சனி ராகு கேது தோஷ பரிகாரத்திற்கு திருநள்ளாறு தலத்திற்கு இணையான தலமாக விளங்குவதாகத் தெரிவிக்கின்றனர்.

அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

சித்திரை முதல் நாள் அன்று காலை சூரிய கதிர்கள் மூலவர் மீது பரவி ஒளிவீசும் காட்சி கண்களை விட்டு அகலாத காட்சியாகும். இதனால் இதனை பாஸ்கர க்ஷேத்திரம் எனவும் அழைக்கின்றனர்.

அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

தேய்பிறை அஷ்டமியன்று மாலை 4.30 மணியளவில் 108 வலம்புரி சங்காபிஷேகத்தைத் தொடர்ந்து கால பைரவ உற்சவ மூர்த்தி நாய் வாகனத்தில் உட்பிரகார புறப்பாடு நடைபெறுவது இத்தலத்தின் முக்கிய நிகழ்வாகும். இப்பூஜையில் கலந்து கொண்டு வேண்டினால், சத்ரு தோஷம், திருமணதடை, குழந்தையின்மை போன்றவை நிவர்த்தி ஆவதாக பலன்பெற்றோர் தெரிவிக்கின்றனர். இந்த கோயிலில் காமிக ஆகமப்படி காலை 8.00 மணிக்கும் மாலை 6 மணிக்கும் இரு கால பூஜைகள் நடந்து வருகின்றன. இத்தலத்தில் வீற்றிருக்கும் அனைத்து தெய்வங்களுக்கு உரிய விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் கார்த்திகை தீபம், ஆருத்ரா தரிசனம், மகா சிவராத்தரி ஆகிய விழாக்கள் முக்கிய பெருவிழாக்கள் ஆகும். பிரதோஷம், ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

சத்ரு தோஷம், திருமணதடை, குழந்தையின்மை ராகுகேது தோஷம் போன்றவற்றிற்கு இத்தலம் முக்கியமானதால் பெரும்பாலா பக்தர்கள் வருகின்றனர்.

அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

சூரியன் வழிபாடு செய்வதால் திருமண தோஷம் நிவர்த்தியாகி இறையருளால் நடைபெறுகிறது. விநாயகருடன் வன்னிமரம் இருப்பதால் நவக்கிரக தோஷம் நிவர்த்தி ஆகிறது. மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி மற்றும் ஞாபக சக்தி கிடைக்கிறது. பைரவர் பூஜை செய்யப்படுவதால், தொழில், மற்றும் புத்திர சந்தானம் திருஷ்டி, வியாதிகள் நிவர்த்தி ஆகிறது.

அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Theniswarar Temple:

அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில், வெள்ளலூர், கோயம்புத்தூர்.

அருள்மிகு தேனீஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here