Arulmigu Omkareshwar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு ஓம்காரேஷ்வர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.
Details of Arulmigu Omkareshwar Temple
அருள்மிகு ஓம்காரேஷ்வர் திருக்கோயில் மூலவர்:
ஓம்காரேஷ்வர்
அருள்மிகு ஓம்காரேஷ்வர் திருக்கோயில் தாயார்:
–
அருள்மிகு ஓம்காரேஷ்வர் திருக்கோயில் தல விருட்சம்:
–
அருள்மிகு ஓம்காரேஷ்வர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:
கூர்க்
அருள்மிகு ஓம்காரேஷ்வர் திருக்கோயில் வரலாறு:
இந்தக் கோயிலை 1820ல், மன்னன் லிங்க ராஜேந்திரன் கட்டினான். கொடுங்கோலனான அவன், தன் அரசியல் அபிலாஷைகளுக்காக, நேர்மை மிக்க ஒரு அந்தணரைக் கொன்றான். இன்னொரு கதை பிரகாரம் அவருடைய மகளை அடைய விரும்பினான். அவர் மறுத்ததால், அவரைக் கொன்றதாகவும் வரவில்லை. அந்தணரைக் கொன்றதால், அரசனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. கனவிலும் நனவிலும் வந்து மன்னனை உலுக்கி எடுத்தார் அந்தணர். சித்திரவதை தாங்காத அவன், ஆன்மிக பெரியவர்களின் யோசனைப்படி, சிவனுக்கு கோயில் கட்டினான். அங்கு காசியிலிருந்து லிங்கத்தை கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்தான்.
கோயில் வாசலில் குளம், சுற்றிலும் மதில் சுவர்கள் உள்ளன. கோயில் படிகளில் ஏறியதும் வளைந்த வாசல் உள்ளது. அதன் கீழே இரு மணிகள் முழக்கமிடுகின்றன. ஏறியவுடனேயே மூலவர் சன்னதி வந்து விடுகிறது. மற்ற கோயில்களை போல் பக்தர்கள் தரிசிப்பதற்கு என விஸ்தாரமான கூடமோ அல்லது தூண்கள் அடங்கிய மண்டபமோ இல்லை. கருவறை கதவின் சாளரங்கள் (ஜன்னல்) பஞ்சலோகத்தால் ஆனது. பிரகார சுவரில் புராண, இதிகாச சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன.
அருள்மிகு ஓம்காரேஷ்வர் திருக்கோயில் சிறப்பு:
இக்கோயிலின் குவிமாடத்திற்கு மேல் திசை காட்டும் கருவி இருப்பது தனிச்சிறப்பு.
அருள்மிகு ஓம்காரேஷ்வர் திருக்கோயில் திருவிழாக்கள்:
பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசை
அருள்மிகு ஓம்காரேஷ்வர் திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு ஓம்காரேஷ்வர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:
தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற பக்தர்கள் இங்குள்ள இறைவனை மனதார வழிபட்டுச் செல்கின்றனர்.
அருள்மிகு ஓம்காரேஷ்வர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:
வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள இறைவனுக்கு நெய்விளக்கேற்றியும், புது வஸ்திரம் சாற்றியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
அருள்மிகு ஓம்காரேஷ்வர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Omkareshwar Temple:
அருள்மிகு ஓம்காரேஷ்வர் திருக்கோயில், மடிக்கரே, கூர்க், கர்நாடகா.
அருள்மிகு ஓம்காரேஷ்வர் திருக்கோயில் கூகுள் மேப்: