Home கோவில்கள் அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Parvatiswarar Temple, பனங்குடி

அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Parvatiswarar Temple, பனங்குடி

அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் – Arulmigu Parvatiswarar Temple, பனங்குடி

Arulmigu Parvatiswarar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.

Details of Arulmigu Parvatiswarar Temple

அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:

பார்வதீஸ்வரர்

அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் தாயார்:

பார்வதீஸ்வரி

அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் தல விருட்சம்:

அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:

பனங்குடி

அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

காவிரிக் கரையில் உள்ள சிவ தலம், பனங்குடி, பொதுவாக காவிரிக் கரையை விட்டு இரண்டொரு காதம் தள்ளியுள்ள ஊர்களைக்கூட காவரிக்கு தென்கரை அல்லது வடகரைத் தலம் என்பார்கள். இந்தப் பனங்குடியோ காவரியின் கரையில், அதன் நீரோட்ட சலசலப்பே மணியோசை போல கேட்கும் அளவுக்கு அருகிலேயே அமைந்த அமைதி துவங்கும் கோயில். ஆற்றைத் தாண்டி கோயிலின் அடிவாசலைத்தொட ஒரு பாலம் முன்பு மூங்கில் பாலமாக இருந்து, இன்று கல் பாலமாகக் கட்டப்பட்டுள்ளது. கிழக்குப் பார்த்த கோயில். தெற்குப் பார்த்தும் கோயிலுக்கு ஒரு வாயில் உண்டு. அது தெருவைப் பார்த்த மாதிரி இருப்பதால், பக்தர்கள் பெரும்பாலும் அந்த வாயிலைத்தான் பயன்படுத்துகிறார்கள். இறைவன் திருநாமம், பார்வதீஸ்வரர் மனைவியின் பெயரையே தனதாய் கொண்டு உமாபதியாக இறைவன் எழுந்தருளியிருப்பதே இக்கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு.

கோயில் இருக்கும் தெருவில் உள்ள வீடுகள் எல்லாம் கி.மு.வை நினைவுப்படுத்தும் அளவுக்கு பழமையாய்க் காட்சியளிக்கின்றன. ஒரு காலத்தில் இங்கே வேதம் படித்த விற்பனைர்கள் நிறைந்திருந்துள்ளனர். வேதம் பயிலும் மாணவர்கள் வேத அத்தியயனம் பண்ணும் குரலொலி காலையும் மாலையும் தெருவெல்லாம் எதிரொலித்ததாகவும் சொல்கிறார்கள்  ஊர்ப் பெரியவர்கள். இங்கு வசித்த அக்னி தீட்சிதர் எனும் வேதியர், ஒரு கோடி முறை காயத்ரி மந்திரம் ஜபித்து, ஆன்ம சுத்தியும் சக்தியும் பெற்றிருந்தார். முக்காலமும் உணர்ந்த ஞானியாக விளங்கிய அவரது அதிஷ்டானம் அருகே உள்ளது. அதிலுள்ள மாடத்தில் எப்போதும்  திருவிளக்கு எரிகிறது.  செய்த பாவங்களை உணர்ந்து, இத்தல இறைவனிடம் மனமுருகி மன்னிப்பு கேட்டுக்கொண்டால் நற்கதி அருள்வார் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் சிறப்பு:

இந்த கோயிலுக்கு காமகோடி மகா பெரியவர், வந்துள்ளது சிறப்பு.

அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருவிழாக்கள்:

பிரதோஷத்தன்று பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. மகா சிவராத்தரி இக்கோயில்களில் மிக விசேஷம். அன்று ஆறு கால அபிஷேகமும் பூஜையும் நடைபெறுகிறது.

அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திறக்கும் நேரம்:

காலை 9 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:

இங்கு அனைத்துவிதமான கோரிக்கைகள் நிறைவேறுவதால் பிரார்த்திக்கின்றனர்.

அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:

சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்யப்படுகிறது.

அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Parvatiswarar Temple:

அருள்மிகு பார்வதீஸ்வரி உடனுறை பார்வதீஸ்வர் கோவில், பனங்குடி,பனங்குடி போஸ்ட், சன்னாநல்லூர்(வழி), நன்னிலம் தாலூகா,திருவாரூர் மாவட்டம்.

அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் கூகுள் மேப்:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here