Arulmigu Sokkanathar Temple Moolavar, Details, History, Highlights. அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் மூலவர், உற்சவர், தாயார், தல விருட்சம், தல வரலாறு மற்றும் கோயிலின் சிறப்பம்சங்கள்.
Details of Arulmigu Sokkanathar Temple
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் மூலவர்:
சொக்கநாதர்
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் தாயார்:
–
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் தல விருட்சம்:
–
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் அமைந்துள்ள ஊர்:
கூடலூர்
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் வரலாறு:
மாமன்னன் ராஜராஜன், கங்கை கொண்ட சோழன் ஆகியோர் வழியில் வந்தவன் அநபாய சோழன். நன்செய்யும் புன்செய்யும் சிறந்து இருந்த தஞ்சையில் அவனது ஆட்சியின்போது பஞ்சம் குடிகொண்டது. மிகுந்த கவலையடைந்த மன்னன், தனது பாட்டன் கட்டிய பெருவுடையார் கோயிலுக்குச் சென்று சன்னதி முன் நின்று, கண்களை மூடி தனக்கு நல்வழிகாட்ட வேண்டினான். கூடலுக்குப் போ! காதருகில் ஒரு குரல் ஒலிக்க, விழி திறந்தவன், எங்கிருந்து அந்தக் குரல் வந்தது? என யோசித்தான். அது ஆண்டவன் கட்டளை என்பதை உணர்ந்தான். அச்சமயம் கூடல் மதுரையில் அவன் ஆட்சியின் கீழ் சிற்றரசனாக பாண்டியன் அரசாண்டு கொண்டிருந்தான்.
அவனிடம் சென்று ஆலோசனை செய்தான். பாண்டிய மன்னன், தன் ஆஸ்தான ஜோதிடரை வரவழைதான். அவரோ பூஜை செய்து சொக்கனை மனதில் நிறுத்தினார். மீனாட்சியிடம், அம்மா வாயேன்! அழும் குழந்தை கண்ணீரைத் துடையேன்! என வேண்டினார். சோழ நாட்டின் வறுமை விலகி, வளம் பெருக வழிகேட்டார். பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட பெருமான் மீனாட்சியுடன் எழுந்தருள மனம் கொண்டார். நடந்தது முடிந்தது. இனி நடப்பது நல்லதாகட்டும். பெருவுடையார்க்கு ஈசான்ய பாகத்தில் ஒரு கோயில் கட்டுக! அங்கு என் பரிவாரங்களுடன் எழுந்தருளி, அனைவரின் துயர் துடைத்து அருள்செய்வோம்! என்று, ஈசனின் குரல் அசரீரியாய் ஒலித்தது. அதன்படி கோயில் கட்டப்பட்டது. ஆனி மாதம் உத்திர நட்சத்திர நாள் ஒன்றில் விமர்சையாக குடமுழுக்கு நடக்க, சொக்கநாதர் தன் தேவியுடன் அங்கு எழுந்தருளினார்.
தஞ்சை மாவட்டத்தில், ஆனித் திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும் பஞ்ச ஆதித்ய தலங்களுள் இதுவும் ஒன்று. வைகாசி மாதமும் மாசி மாதமும் மாலைவேளையில் சூரிய ஒளி இறைவன்மீது படர்வதைக் காணலாம்.
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் சிறப்பு:
ஆனி உத்திர தினம், சொக்கநாதர் தன் குடும்பத்தாருடன் தஞ்சையைக் காப்பதற்காக இங்கு வந்து குடியேறி நாள் என்பதால், அன்று காலை 7 மணி முதல் 8 மணிக்குள் அவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் திருவிழாக்கள்:
சித்திரை தமிழ் வருடப் பிறப்பும், சித்ரா பவுர்ணமியும் சிறப்பு விழாக்கள்.
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் பிரார்த்தனைகள்:
பார்வைக்கோளாறு, ஜாதகத்தில் சூரிய தோஷம் உடையோருக்கு சிறந்த பரிகார தலமிது. பஞ்ச ஆதித்ய தலங்களையும் ஒரே நாளில், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட்டால், வாழ்வில் எல்லா நற்பலன்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் நேர்த்திக்கடன்:
சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் முகவரி – Address of Arulmigu Sokkanathar Temple:
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில்,
கூடலூர் 613 003
தஞ்சாவூர்.
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் கூகுள் மேப்: