How to remember rahu kalam and yamagandam



பொதுவாகவே, வெளியே செல்லும்போதோ, சுபகாரியம் செய்யும் போதோ ராகு காலம், யமகண்டம் பார்ப்பது பலருக்கும் வழக்கம்.
அந்த சமயத்தில் அவசர அவசரமாக காலண்டரைத் தேடி அன்றைய தினத்து ராகு காலம், எமகண்டத்தை பார்ப்பதே பரபரப்பானதாக இருக்கும்.
ராகு காலம் காலண்டரை பார்க்காமலே அறியும் வழி
அப்படி இல்லாமல், ஒவ்வொரு நாளுக்கும் உரிய ராகு காலம் எளிதாக அறிந்துகொள்ள சுலபமான வழி உண்டு.
அதற்கு, கீழ்க்கண்ட வாக்கியத்தை முதலில் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்.
ஆண்டாள் ஸ்லோகம் – Andal slokas in tamil
`திருநாள் சந்தடியில் வெயிலில் புறப் பட்டு விளையாடச் செல்வது ஞாயமா?’
இந்த வாக்கியம், ராகுகாலத்தினை அறிவதற்கானது. வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளில் முதல் எழுத்துகளை, கிழமைகளின் முதல் எழுத்தாக கொள்ளுங்கள்.
முதலில் திங்கட்கிழமையில் காலையில் 7.30 மணி முதல் 9 மணி வரை ராகுகாலம் அமையும். அதுமுதல் அடுத்தடுத்துள்ள மணி நேரத்திற்கு உரிய தினம் எது என்று தெரியுமா?
- திங்கள்: 7.30-9.00
- சனி: 9.00-10.30
- வெள்ளி: 10.30-12.00
- புதன்: 12.00-1.30
- வியாழன்: 1.30-3.00
- செவ்வாய்: 3.00-4.30
- ஞாயிறு: 4.30-6.00.
மேற்கண்டவாறு மனப்பாடம் செய்து கொண்டால் காலண்டரைப் பார்க்காமலே சட்டென்று ராகு காலம் சொல்லிவிடலாம் இல்லையா?
எம கண்டம் காலண்டரை பார்க்காமலே அறியும் வழி
விளையாட்டாய் புண்ணியம் செய்தாலும் திருவருளை ஞானமும் சத்தியமும் வெளிப்படுத்தும்.
யமகண்டம் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணி வரை அமையும். இந்த வாக்கியத்தில் உள்ள முதல் எழுத்து வரிசைப்படி கிழமைகள் அடுத்தடுத்துவர, அடுத்தடுத்த 1.30 மணி நேரம் யமகண்டமாகும்.
- வியாழன்: 6.00-7.30
- புதன்: 7.30-9.00
- செவ்வாய்: 9.00-10.30
- திங்கள்: 10.30-12.00
- ஞாயிறு: 12.00-1.30
- சனி: 1.30- 3.00
- வெள்ளி: 3.00-4.30.
என்ன… இனிமேல் ராகுகாலம், யமகண்டம் பார்ப்பது சுலபம்தானே!
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
இதையும் படிக்கலாமே
🔥 Trending



Latest

