திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கலினாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா கலினாளுக்கிறங்கி கல்லிலே இறங்கி நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை என்றும் இருந்திட ஏது குறை எனக்கு என்றும் இருந்திட ஏது குறை எனக்கு ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
ENGLISH
Pallavi(Sivaranjini)
kurai ondrum illai marai moorthi kanna kurai ondrum illai kanna…… kurai ondrum illai govindaa..