ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய் அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய் வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே …… 35
தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய் திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய் செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் …… 40
கந்த குரு கவசம்,
அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும் திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய் எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை …… 45
பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய் எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய் திருப்போருர் மாமுருகா திருவடியே சரணமய்யா …… 50
அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய் திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய் செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும் சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் …… 55
அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான் உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய் அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் …… 80
அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய் அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர் சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும் வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ …… 85
யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய் நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் …… 90
பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர் உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய் யானென தற்ற மெய்ஞ் ஞானம் தருள்வாய் நீ முக்திக்கு வித்தான முருகா கந்தா சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா …… 95
ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய் தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய் சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய் பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ …… 100
கந்த குரு கவசம்,
ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய் உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா தேவாதி தேவா சிவகுரோ வா வா வா வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா …… 105
மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய் வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய் வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய் வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் …… 145
பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய் ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய் ஸ்கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே …… 215
கந்த குரு கவசம்,
பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய் பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய் தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய் எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய் ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் …… 220
சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே சரவண பவனே சரவண பவனே உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன் உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் …… 225
சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய் இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான் இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான் மனதை அடக்க வழி ஒனறும் அறிந்திலேன் நான் ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே …… 230
மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய் கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே …… 255
அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய் ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ …… 260
ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனாக்கிடுவாய் அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய் அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் …… 265
உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய் எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய் அன்பே சிவமும் அன்பே சக்தியும் …… 270
அன்பே மெளனம் அன்பே மோக்ஷம் அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய் அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய் எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் …… 280
ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும் மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும் கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா …… 300
கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே சிவவாக்கியர் சித்தர் உனைச் சிவன் மலையில் போற்றுவரே பழனியில் போகருமே பாரோர் வாழப் ப்ரதிஷ்டை செய்திட்டார் …… 305
முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும் அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும் ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன் கள்ளமிலா உள்ளத்தோடு கந்தகுரு கவசம் தன்னை சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் …… 395
பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும் கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன் பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல் திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று காத்திடுவான் கந்தகுரு கவலை இல்லை நிச்சயமாய் …… 400
ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான இகபரசுகம் உண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை துன்பம் அகன்று விடும் தொந்திரைகள் நீங்கிவிடும் …… 405
கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின் ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் …… 425
ஒருதரம் கவசம் ஓதின் உள்ளழுக்குப் போகும் இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும் மூன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு நான்குமுறை ஓதி தினம் நல்லவரம் பெறுவீர் ஐந்துமுறை தினமோதி பஞ்சாட்சரம் பெற்று …… 430
ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர் ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும் எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்திகிட்டும் ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும் பத்துதரம் ஓதி நித்தம் பற்றறுத்து வாழ்வீரே …… 435
கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக் கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால் முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான் நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும் கன்னிமார் ஓடை நீரை கைகளில் நீ எடுத்துக் …… 440
கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன் சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும் கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் …… 445
கந்த குரு கவசம் பாடல், கந்த குரு கவசம், skanda sashti kavasam lyrics in tamil pdf, Lord Murugan Potri Songs, lord murugan mantra, kandha guru kavasam tamil, kandha guru kavasam mp4 free download, kandha guru kavasam lyrics in tamil mp3, Kandha Guru Kavasam Lyrics In Tamil