
ராகு காலம் மற்றும் எமகண்டம்: Easy method to find out raaghu kalam and yamakandam: ராகு காலம் மற்றும் எமகண்டத்தை கண்டறிய ஒரு எளிமையான வழி உள்ளது. நம் வீட்டில் சுபகாரியமும் அல்லது முக்கியமான வேலைக்கு வெளியில் கிளம்பும் போது ராகு காலம் மற்றும் எமகண்டம் பார்த்த பின்பு நல்ல நேரத்தில் மற்ற வேலைகளை செய்ய தொடங்குவோம்.
அதுபோன்ற சமயங்களில் காலண்டரை தேடி அலைவோம். அப்படிப்பட்ட எமகண்டம் மற்றும் ராகு காலத்தை எளிதில் கண்டறிய வழி உள்ளது.
இன்றைய ராகு காலத்தை கண்டறிய | Rahu Kalam Yamagandam Kuligai Timings
திருநாள் சந்தடியில் வெயிலில் புறப் பட்டு விளையாடச் செல்வது ஞாயமா?
இந்த வாக்கியம், ராகுகாலத்தினை அறிவதற்கானது. வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளில் முதல் எழுத்துகளை, கிழமைகளின் முதல் எழுத்தாக கொள்ளுங்கள்.
முதலில் திங்கட்கிழமையில் காலையில் 7.30 மணி முதல் 9 மணி வரை ராகுகாலம் அமையும். அதுமுதல் அடுத்தடுத்துள்ள 1 மணி நேரத்திற்கு உரிய தினம் எது என்று தெரியும்.
- திங்கள்: 7.30-9.00
- சனி: 9.00-10.30
- வெள்ளி: 10.30-12.00
- புதன்: 12.00-1.30
- வியாழன்: 1.30-3.00
- செவ்வாய்: 3.00-4.30
- ஞாயிறு: 4.30-6.00.
மேற்கண்டவாறு மனப்பாடம் செய்து கொண்டால் காலண்டரைப் பார்க்காமலே சட்டென்று ராகு காலம் சொல்லிவிடலாம் அல்லவா!
இன்றைய எமகண்டத்தை கண்டறிய
விளையாட்டாய் புண்ணியம் செய்தாலும் திருவருளை ஞானமும் சத்தியமும் வெளிப்படுத்தும்.
மேலே உள்ள வாக்கியம் எமகண்டத்தை கண்டறிவதற்கு. அதில் உள்ள ஒரு வார்த்தையின் முதல் எழுத்துக்களும் கிழமைகளை குறிக்கும். அதாவது “விளையாட்டாய்” எனும் வார்த்தை வியாழக்கிழமையை குறிக்கும். வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 7:30 மணி வரை எமகண்டம். அதன்படி
- வியாழன்: 6.00-7.30
- புதன்: 7.30-9.00
- செவ்வாய்: 9.00-10.30
- திங்கள்: 10.30-12.00
- ஞாயிறு: 12.00-1.30
- சனி: 1.30- 3.00
- வெள்ளி: 3.00-4.30.
இவ்வாறு எளிமையான முறையில் ராகு காலம் மற்றும் எமகண்டத்தை கண்டறியலாம் இனி காலண்டரை தேடி ஓட வேண்டிய அவசியம் இல்லை.
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]
[pld_simple_list limit=”9″ pagination=”false”]
yamagandam today, today rahu kalam yamagandam timings telugu, rahu kalam today, rahu kalam timings, rahu kalam tomorrow, rahu kalam today hyderabad, rahu kalam friday, today rahu kalam telugu, இன்று ராகு காலம் எத்தனை மணிக்கு, ஞாயிற்றுக்கிழமை ராகு காலம், ராகு காலம் நேரம், செவ்வாய்க்கிழமை ராகு காலம், ராகு காலம் 2023, இரவு நேர ராகு காலம்