சிறுவாபுரி முருகன் Siruvapuri Murugan
சிறுவாபுரியில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமை தோறும் சென்று வணங்கி வர புதிய வீடு கட்டும் அல்லது வாங்கும் பாக்கியம் பெறுவார்கள்.
பின்வரும் திருப்புகழை சிறுவாபுரி முருகன் சன்னதியில் செவ்வாய்க்கிழமை காலையில் கூறுவதன் மூலம் நீங்கள் நினைத்த காரியம் நடக்கும்.
அருணகிரிநாதர் அருளிய முருகன் திருப்புகழ் 724 அண்டர்பதி குடியேற….
திருப்புகழ் 724 அண்டர்பதி குடியேற….
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற …… வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு …… மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு …… மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி …… வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள …… வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு …… வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய …… முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு …… பெருமாளே.
இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்
மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்
அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story
இதையும் படிக்கலாமே
🔥 Trending



Latest

