விஷ்ணு பெருமானின் தசாவதாரம் தெரியும். சிவபெருமானின் அவதாரங்கள் தெரியுமா…?
பொதுவாக அவதாரம் எடுப்பது என்பது கடவுள் பூமியில் தீமைகள் அதிகரிக்கும் போது அவைகளை அழித்து மக்களை காப்பாற்றுவதற்காக மனிதனாக பிறப்பெடுப்பது என்பதாகும். சிவபெருமானின் எடுத்துள்ள அவதாரங்கள் பற்றி 16ஆம் நூற்றாண்டில் அதிவீரராம பாண்டியனால் எழுதப்பட்டது கூர்ம புராணம் ஆகும்.
வட மொழியில் இருந்த பாயிரத்தை தமிழில் இவர் மொழி பெயர்த்ததாகக் கூறப்படுகிறது. கூர்ம அவதாரம் எடுத்த விஷ்ணு பெருமான் சிவ பெருமானின் பெருமைகளை எடுத்துரைத்ததாக இது சொல்லப்படுகிறது. இந்த புரானமானது இரண்டு பகுதிகளாக உள்ளது. ஒன்று, பூர்வகாண்டம். மற்றொன்று உத்தர காண்டம். பூர்வ காண்டமானது 48 அத்தியாயங்களாக 2729 பாடல்கள் உள்ளது. உத்தர காண்டமானது 47 அத்தியாயங்களாக 899 பாடல்கள் உள்ளது.
சிவபெருமானின் அவதாரங்கள் அதில் 27 என சொல்லப்படுகிறது.