நம் வாழ்க்கையில் ஏற்படும் மன கஷ்டங்களை நீக்கி, நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டுமானால், இஷ்டதெய்வத்தை மனதில் நினைத்து கீழுள்ள மதுராஷ்டகத்தை உச்சரிக்க வேண்டும், இவ்வாறு உச்சரிப்பதன் மூலம் நம் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ இயலும்.
உனது பேச்சு இனியது. தன்மை அழகானது. நீ இருக்கும் இடம் அழகு. தவழ்தல் அழகு, நகர்தல் அழகு. சுழற்சி அழகு, மதுரா நாயகனே எதிலும் நீயே நிறைந்திருப்பதால் உலகமே அழகு.
உனது கீதம் அழகு. நீ பருகுதலும் அழகு. உண்பதும் காண்பதும் அழகு. தூங்குவது கொள்ளை அழகு. உன் உருவம் அழகு. உனது நெற்றிப்பொட்டு அழகு. மதுரா நாயகனே எல்லாமே நீ என்பதால் அகிலமே அழகு.
உனது செயல்கள் அழகு. நீ எதையும் கடந்து நிற்பது அழகு. பக்தர்களின் மனதை அபகரிப்பது அழகு. உன்னைப்பற்றி நினைப்பதே இனிமையானது. அணி அழகு, தோற்றம் அழகு, மதுராபுரியரசே, யாவும் நீயாக இருப்பதால் இவ்வுலகமே அழகானது.
நம் வாழ்வில் உள்ள துயரங்கள் நீங்கி இன்பமாக வாழ, இந்த மனகஷ்டத்தை ஒவ்வொரு திங்கட்கிழமை அன்று காலையில் உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரிப்பதன் மூலம், மனக் கஷ்டங்கள் நீங்கி மனம் அமைதி நிலையை அடையும்.