Pudhan Kilamai Solla vendiya Mandiram: கிழமைகளிலேயே புதன்கிழமைக்கு ஒரு தனிப்பெரும் சிறப்பு உண்டு. இதை சொன்ன உடனே உங்களுக்கு கண்டிப்பா ஞாபகம் வந்திருக்கும் “பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” எனும் பழமொழி.
புதன்கிழமையை எல்லா வகையான சுப காரியங்களுக்கும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படிப்பட்ட ஒரு உயர்ந்த நாளாகிய புதன் அப்படிங்கற இந்த நாளுக்குரிய பகவான் யாரு அப்படின்னா புதன் கிரகம் அது எல்லாருக்கும் தெரியும். அப்படிப்பட்ட புதன் கிரகத்திற்கு அதி தேவதையாக விளங்க கூடியவர் மகாவிஷ்ணு ஆவார்.
புதன்கிழமையில் பின்வரும் துதியை காலையில் குளித்து முடித்து பூஜையில் விளக்கு ஏற்றி கூறுவதன் மூலம் குடும்பத்தில் அமைதி, செல்வ செழிப்பு, குழந்தைகளில் படிப்பில் முன்னேற்றம் ஆகியவைகளை அடைவீர்கள்.
வேண்டத் தக்க தறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ வேண்டும் அயன்மாற் கரியோய் நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உந்தன் விருப்பன்றே.
ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க வெற்பைக் கூறு செய் தனி வேல் வாழ்க குக்குடம் வாழ்க -செவ்வேல் ஏறிய மஞ்ஞை வாழ்க ஆணை தன் அணங்கு வாழ்க மாறில்லா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம் !
அம்பாள் துதி
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப் பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே
இந்த துதிகளை புதன்கிழமை தோறும் சொல்லி வர வாழ்வில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். புதன் பகவானின் அருளை பெறுவீர்கள். ஆன்மீக அன்பர்களுக்கு நன்றி வணக்கம்!