Home மந்திரங்கள் Sri Nagarajar 108 potri tamil | ஸ்ரீ நாகர் 108 போற்றி

Sri Nagarajar 108 potri tamil | ஸ்ரீ நாகர் 108 போற்றி

Sri Nagarajar 108 potri tamil | ஸ்ரீ நாகர் 108 போற்றி

ஸ்ரீ நாகர் 108 போற்றி: இந்த 108 நாகர் போற்றிகளை நாள்தோறும் தவறாமல் உச்சரித்து வந்தால், வீட்டில் உள்ள கடன் பிரச்சனைகள் நீங்கி, நிம்மதியுடன் வாழ வழி வகுக்கும். அதே சமயம் நம்மை நெருங்கி ஆபத்தும் எளிதில் விலகி விடும்.

108 நாகராஜர் போற்றி | Sri Nagarajan 108 potri tamil

ஓம் நல் அரவமே போற் ஐயப்பாறி
ஓம் நாகதேவதையே போற்றி
ஓம் அரசடியருள்வோரே போற்றி
ஓம் அபயமளிப்போரே போற்றி
ஓம் அன்பர்க்கெளியோரே போற்றி
ஓம் அடங்காரின் அழிவே போற்றி
ஓம் அரன் அணியரே போற்றி
ஓம் அபிஷேகப் பிரியரே போற்றி
ஓம் அனந்தனே போற்றி
ஓம் ஆதிசேஷனே போற்றி

ஓம் ஆடியருள்பவரே போற்றி
ஓம் ஆனைமுகன் அருகிலிருப்பவரே போற்றி
ஓம் ஆலமுடையவரே போற்றி
ஓம் ஆயுதமானவரே போற்றி
ஓம் இசைப்பிரியரே போற்றி
ஓம் இறையருள் கூட்டுவிப்பவரே போற்றி
ஓம் ஈறிலாரே போற்றி
ஓம் ஈர்க்கும் வடிவினரே போற்றி
ஓம் ஊர்ந்து வருபவரே போற்றி
ஓம் ஊர்தோறும் அருள்வோரே போற்றி

ஓம் எங்குமிருப்போரே போற்றி
ஓம் எளிதில் மகிழ்வோரே போற்றி
ஓம் எண்ணிலாத் தலையரே போற்றி
ஓம் ஏற்றமளிப்போரே போற்றி
ஓம் ஒப்பிலாரே போற்றி
ஓம் ஒன்றுவிப்பவரே போற்றி
ஓம் கம்பளரே போற்றி
ஓம் கத்ரு பத்ரரே போற்றி
ஓம் கம்பீரரே போற்றி
ஓம் கருடனைப் பணிந்தோரே போற்றி

ஓம் காணற்கினியவரே போற்றி
ஓம் கயவரையழிப்பவரே போற்றி
ஓம் காளிங்கரே போற்றி
ஓம் கண்ணனுக்கடங்கியவரே போற்றி
ஓம் கார்க்கோடகரே போற்றி
ஓம் காலனுக்கு ஆயுதரே போற்றி
ஓம் கிரீடமானவரே போற்றி
ஓம் கிரகதோஷநாசகரே போற்றி
ஓம் குங்குமப்பிரியரே போற்றி
ஓம் குலக்காவலரே போற்றி

ஓம் கேது சிரமானவரே போற்றி
ஓம் கோள்வினை பொடிப்பவரே போற்றி
ஓம் சங்கரே போற்றி
ஓம் சப்தநாகரே போற்றி
ஓம் சக்தி வடிவினரே போற்றி
ஓம் சங்கரனை அணைவோரே போற்றி
ஓம் சட்டை உரிப்போரே போற்றி
ஓம் சத்தியத்துக் கடங்கியவரே போற்றி
ஓம் சிவதாசரே போற்றி
ஓம் சிவனருள் பெற்றோரே போற்றி

ஓம் சுகுமாரதாசரே போற்றி
ஓம் சுப்ரமண்ய÷க்ஷதரரே போற்றி
ஓம் சீறுவோரே போற்றி
ஓம் சீதள உடலோரே போற்றி
ஓம் தக்ஷகரே போற்றி
ஓம் ததிகர்ணரே போற்றி
ஓம் தீனர்க்காவலரே போற்றி
ஓம் தீயோர்க்கு நஞ்சே போற்றி
ஓம் துதிப்பிரியரே போற்றி
ஓம் துன்பம் துடைப்போரே போற்றி

ஓம் நமனாரின் சேவகரே போற்றி
ஓம் நல்லோரைக் காப்போரே போற்றி
ஓம் நாகலக்ஷ்மியே போற்றி
ஓம் நாகராஜரே போற்றி
ஓம் நாக கன்னியரே போற்றி
ஓம் நாடப்படுவோரே போற்றி
ஓம் நாக நாகினியரே போற்றி
ஓம் நாகபஞ்சமித்தேவரே போற்றி
ஓம் நாதத்தில் லயிப்போரே போற்றி
ஓம் நாதனைப் பணிந்தோரே போற்றி

ஓம் நீள் வடிவினரே போற்றி
ஓம் நொடியில் யருள்வோரே போற்றி
ஓம் பஞ்சமித் தோன்றலே போற்றி
ஓம் பரனருள் பெற்றோரே போற்றி
ஓம் பத்மனே போற்றி
ஓம் பளபளக்கும் மேனியரே போற்றி
ஓம் படைநடுக்குவிப்போரே போற்றி
ஓம் பல் வடிவில் அருள்வோரே போற்றி
ஓம் பால் பிரியரே போற்றி
ஓம் பாடலில் மயங்குவோரே போற்றி

ஓம் பஞ்சபூதத் தேவரே போற்றி
ஓம் பாதாள வாசரே போற்றி
ஓம் புண்ணியரே போற்றி
ஓம் புற்றிலுறைவோரே போற்றி
ஓம் புகழ்படைத்தோரே போற்றி
ஓம் பூஜிக்கப்படுவோரே போற்றி
ஓம் புனிதரே போற்றி
ஓம் பூவுலகோர்த் தேவரே போற்றி
ஓம் மரத்தடியிருப்போரே போற்றி
ஓம் மகுடிக்கடங்குவோரே போற்றி

ஓம் மகளிர்த் தேவரே போற்றி
ஓம் மஞ்சளில் மகிழ்வோரே போற்றி
ஓம் மகவளிப்போரே போற்றி
ஓம் மலடு நீக்குவோரே போற்றி
ஓம் மணிபத்ரனே போற்றி
ஓம் மால் ஆசனனே போற்றி
ஓம் மானஸையே போற்றி
ஓம் மாலருளும் பொற்றோரே போற்றி
ஓம் முட்டை ஏற்போரே போற்றி
ஓம் முக்கியத் தேவரே போற்றி

ஓம் ராகு உடலானோரே போற்றி
ஓம் ருத்ரனுடனிப்போரே போற்றி
ஓம் வாசுகியே போற்றி
ஓம் வளைந்து வருவோரே போற்றி
ஓம் வல்லோரே போற்றி
ஓம் வரமருள்வோரே போற்றி
ஓம் வேண்டியதைத் தருவோரே போற்றி
ஓம் வெற்றியருள்வோரே போற்றி.

தினமும் காலையில் எழுந்து நீராடியபின், இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து இப்போற்றியை உச்சரித்து வந்தால், நம்மை நெருங்கிய தீமைகள் விலகி, நன்மை மட்டுமே உண்டாகும்.

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here