ஒன்பது நவகிரகங்களில் ஒருவரான ஸ்ரீ சுக்கிர பகவானின் பரிபூரண அருளைப் பெற, கீழுள்ள இந்த ஸ்லோகத்தை வெள்ளிக்கிழமையன்று தவறாமல் உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரிப்பதன் மூலம் நம் இன்னல்கள் நீங்கி, நிம்மதியான வாழ்க்கையை வாழ இயலும்.
தினமும் காலையில் நீராடிய பின் அருகில் உள்ள சிவன் ஆலயத்திற்கு சென்று, நவகிரகங்களின் சன்னதியில் சுக்கிர பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி, மலர்களால் மாலை தொடுத்து, இம்மந்திரத்தை கூறி வழிப்பட்டால், அவரின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் இப்பூஜை செய்தால், அதற்கான பலன் விரைவில் கைகூடும்.