Home கோவில்கள் Nakshatra temple in tamilnadu | நட்சத்திரங்களுக்கான ஆலயங்களும்

Nakshatra temple in tamilnadu | நட்சத்திரங்களுக்கான ஆலயங்களும்

Nakshatra temple in tamilnadu | நட்சத்திரங்களுக்கான ஆலயங்களும்

Star’s temple in india – நட்சத்திரங்களுக்கான ஆலயங்களும், அவைகள் அமைந்த இடங்களும்:

natchathiram temples in tamilnadu dinamalar 27 star temples 27 nakshatra temples in chennai rasi temples in tamilnadu thiruvonam temple in tamilnadu 27 nakshatra temples in andhra pradesh 27 nakshatra temple near kanchipuram sadayam nakshatra temple birth star temples in kerala 27 nakshatra temples in chennai rasi temples in tamilnadu dinamalar 27 star temples thiruvonam temple in tamilnadu 27 nakshatra temples in andhra pradesh 27 nakshatra temple near kanchipuram

அஸ்வினி

அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்:
திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

பரணி

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்: மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில்  உள்ளது.

இந்துக்கள் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய முக்கிய கடமைகள்!

கார்த்திகை

அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:
 மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.

ரோஹிணி

அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்:
காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.

பழநி மலை முருகன் சிலையின் ரகசியங்கள் – Palani murugan statue secret

மிருக சீரிஷம்

அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம் :
தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில் முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.

திருவாதிரை

அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் :
தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.

பஞ்சபூத சிவ தலங்கள் – Pancha Bhoota Stalam

புனர்பூசம்

அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் :
வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண்டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய வாணியம் பாடியில் கோயில் உள்ளது.

பூசம்

அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:
பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது.

ஆயில்யம்

அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்:
கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு

நாம் செய்யும் நல்ல செயல்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும்

மகம்

அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:
திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

பூரம்

அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் 
இருப்பிடம்:
புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.

உத்திரம்

அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் :
திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.

சிவபெருமானின் அவதாரங்கள்

ஹஸ்தம்

அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:
கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது.

சித்திரை

அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்.
இருப்பிடம்:
மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில்  கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.

சுவாதி

அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:
சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.

தமிழ் கடவுள் முருகனின் 16 திருக்கோலங்கள்

விசாகம்

அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
இருப்பிடம்
: மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன

அனுஷம்

அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.

கேட்டை

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்:
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

விளக்கேற்றும் முன் சொல்ல வேண்டியவை….

மூலம்

அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:
சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில்  உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து 22 கி.மீ. பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)

பூராடம்

அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்:
தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

உத்திராடம்

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்:
சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.

வீட்டின் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்?

திருவோணம்

பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்.
இருப்பிடம்:
வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற்கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்

அவிட்டம்

அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம் :
கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது..

சதயம்

அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.

எந்த வயதில் ஜாதகம் எழுதலாம்? – When to write horoscope for child

பூரட்டாதி

அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்.
இருப்பிடம்:
திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.

உத்திரட்டாதி

அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்.
இருப்பிடம்:
புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது.  மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூரம் 120 கி.மீ.

சிவபெருமான் 1008 போற்றி – 1008 Sivan pottri lyrics in Tamil

ரேவதி

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.
இருப்பிடம்:
திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்ற ஊரில் இக்கோயில் உள்ளது.

இன்றைய ராசிபலன் | Today rasi palan பார்க்க கிளிக் செய்யவும்

மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு Telegram சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.

கூகுள் நியூஸில் ஆன்மீக தகவலை பாலோ செய்யவும்

அண்மை வெப் ஸ்டோரி களை காண கிளிக் செய்யவும்: – Web story


[pld_simple_list limit=”9″ order=”DESC” orderby=”rand” pagination=”false”]

[pld_simple_list limit=”9″ pagination=”false”]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here